அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.எடையார் கிராமத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பனப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி சுமை அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் தனது வீட்டில் ஆயிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆயிஷாவின் உடலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.