Categories
தேசிய செய்திகள்

பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க…. மத்திய அரசின் செம சூப்பர் திட்டம்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி சென்று பணிபுரியும் பெண்களுக்கு நம்பகமான மற்றும் அவர்களுக்கு வசதியாக தங்குமிடங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பணிபுரியும் மகளிர் விடுதி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் தங்கும் விடுதிகளில் மேம்படுத்துவதற்காக புதிய கட்டிடங்கள் அல்லது தற்போது உள்ள கட்டிடங்களை கட்டுவதற்கு அரசு சார்பாக மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், வெளியிடங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கான தின பராமரிப்பு வசதி. புதிய கட்டடங்களை அமைப்பதற்கான திட்டங்களுக்கு உதவுதல் மற்றும்  ஏற்கனவே உள்ள கட்டடங்களை மேலும் விரிவாக்குதல். மேலும் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் கிடைக்க வழிவகுத்தல்.

இந்தத் திட்டத்தின் கீழ் சேவைகளை பெற என்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்றால், பணிபுரியும் பெண்கள் ஒற்றை, விவாகரத்து, திருமணமான, விதவை, கணவரை பிரிந்த, ஆனால் அதே நகரத்திலோ அல்லது அதே பகுதியிலோ வசிக்கும் கணவன் அல்லது உறவினர்கள். இதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஊனமுற்ற பயனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி பெண் விண்ணப்பதாரர்கள் மொத்த வருமானம் ஆனது ஒரு மாதத்திற்கு பெருநகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட வருமானம் ரூபாய் 50,000த்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஏற்கனவே விடுதியில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரர்களாக இருந்தால் வருமானம் குறிப்பிட்ட வரம்புகளை மீறினால் கடந்த ஆறு மாதங்களுக்குள் அவர் விடுதியை காலி செய்ய வேண்டும்.

Categories

Tech |