மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வைத்து மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில் பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சுப்பிரமணியன், கவுரவத் தலைவர் சக்திவேல், மருந்தாளுநர்கள், மாநில பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாநில பொது செயலாளர் சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் மாதம் 24- ஆம் தேதி அனைத்து மருந்தாளுநர்களும் அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.