Categories
மாநில செய்திகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவு…? மக்கள் நல வாழ்வு துறை அமைச்சரின் தகவல்…!!!!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் அவருக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸ் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்குவதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவர்கள் இல்லத்திற்கு சென்ற போது அங்கு இருவரும் தலை மறைவானது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய போது, மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவ குழுவினரின் விசாரணை அடிப்படையிலே மருத்துவர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மருத்துவர்களின்  கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தின் காரணங்களால் இது போன்ற தவறுகள் நடக்கிறது.

இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. மருத்துவரின் கவன குறைவால்  தான் மாணவி உயிரிழந்தார் என்பது வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |