நெல்லையில் வேலையில் இருக்கும்போதே இறந்த காவல்துறை ஊழியரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருக்கும் காவல் நிலையத்தில் சாமுவேல் என்பவர் ஏட்டா பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர் கடந்த 9.3.20 நாளன்று பணியில் இருக்கும்போதே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணத்தின் நிதியிலிருந்து 3,00,000 ரூபாய் நிதியை வழங்கியுள்ளனர். இதனை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன், சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். இதை சாமுவேலின் மனைவியான தங்கமலர்மதியிடம் வழங்கியுள்ளார்.