Categories
மாவட்ட செய்திகள்

பணியில் இருந்தபோது…. புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகிலுள்ள பூட்டேற்றி ஆத்திவிளையில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் அருள்மணி நேற்று பூட்டேற்றி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அருள்மணி மாலையில் பணியில் இருந்த போது  திடீரென  மின்சாரம் பாய்ந்து அவரை தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்மணி உடலை உடற்கூறு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில் அருள்மணி இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனையின் வளாகத்தில் குவிந்தனர். அப்போது கணவன் உடலை பார்த்த மனைவி கதறி அழுதது காண்பவர்களின் நெஞ்சை உலுக்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |