Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மழுவன்சேரி பகுதியில் மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மதுசூதனன் தோலடி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது செருவல்லூர் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார்(39) என்பவர் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்துள்ளார்.

மேலும் கத்தியை காட்டி திலீப் குமார் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுசூதனன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திலீப்குமாரை கைது செய்தனர்.

Categories

Tech |