பழுது பார்க்க சென்ற மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளயம் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம். இவர் மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மரக்கானத்திற்கு அருகில் உள்ள கோண வாயன் என்ற குப்பத்தில் பழுதடைந்த மின்மாற்றியை சரி பார்க்க சென்றுள்ளார். அப்போது மின்மாற்றியில் உள்ள பழுதை சரி பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத வகையில் மின்சாரத்தால் தாக்கப்பட்டார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.