Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்கள்…. வேகமாக வந்து மோதிய பேருந்து…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. மேலும் பணியிலிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், போக்குவரத்து போலீஸ்காரர் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |