பெரம்பலூரில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியில் இருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவ கண்காணிப்பாளராக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த மருத்துவமனையில் நேற்று மதியம் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளை பார்த்தார். அதன் பின்பு தனது அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றனர. ஆனால் தர்மலிங்கம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது சொந்த ஊரான ஒகளூருக்கு அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்த மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.