திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் மனோன்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரயில்வே ஊழியரான பிரபாகரன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 20-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் பிரபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை ஓசூர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் பிரபாகரனின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அவரது இதயம், நுரையீரல், கல்லீரல் சென்னைக்கும், சிறுநீரகங்கள் கோவைக்கும், கண்கள் பெங்களூரில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.