கொலம்பியா நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையில் அந்த நாட்டின் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ஒடோனியல் போதைப் பொருள் கடத்தலுக்கு கலப் கிலன் என்ற தனிப்படை ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த போதைப் பொருள் கடத்தல் படை அதிநவீன ஆயுதங்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் கொலம்பியா ராணுவத்தினர் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ஒடோனியலை கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த நாட்டின் அண்டிகுவா மாகாணம் இட்வாங்கோ பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கல்ப் கிலன் பிரிவினர் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கொலம்பியா ராணுவ வீரர்கள் 4 பேர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் அதிக அளவு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது.