தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பாக 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அகல விலைப்படி உயர்வு வழங்குவதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பாகுபாடு நடத்தப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 86,000 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பென்சன் நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.எனவே வருகின்ற நவம்பர் மாதம் முதல் அகலவிலைப்படி உயர்வு அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.