Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. மேற்பார்வை பொறியாளரின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி ஊழியர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ஜெய்சங்கர் பராமரிப்பு  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெய்சங்கரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவனமாக வேலை செய்யாத செயற்பொறியாளர் ரகுமான் மற்றும் ஜெகநாதன் ஆகிய 2 பேரையும் பணியிடைநீக்கம் செய்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |