Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று  தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து ஆலையில் தீ பற்றியது . இந்நிலையில்  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கதிர்வேல் என்பவர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கதிர்வேலின் மனைவி அமிர்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ஆலையின் உரிமையாளர் ரவீந்திரன், போர் மேன், அய்யனார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |