Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்… காலி பணியிடத்தை நிரப்பனும்… மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்…!!

நாகையில் ஊதிய உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உட்பட பல  கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை  மாவட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, வட்ட கிளை செயலாளர் சாரதி, வீராசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், காலி பணியிடங்களை நிரப்ப முயற்சியும்  எடுக்க வேண்டும். மேலும் துறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிறுத்திய ஆண்டு முதல் சம்பள உயர்வு மீண்டும் கொடுக்க வேண்டும் மற்றும் மேட்டூர் பணிமனை உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 100க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினார்கள்.

Categories

Tech |