Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அங்கன்வாடி ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார்.

இவர்கள் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமதிலகம், பொருளாளர் இந்திரா, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |