Categories
தேசிய செய்திகள்

“பணி நேரத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய போலீசார்”…? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

பணி நேரத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமி என்னும் பகுதியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள் பணி நேரத்தின்போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில் 3 கான்ஸ்டபிள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து பணியின் போது பெண் கான்ஸ்டபில்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பெண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |