Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணி முடிந்து வந்த போலீஸ்காரர்…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் ஜெய்னுலா பீதின்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாம்பரம் போஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை ஜெய்னுலா சொந்த ஊரில் விட்டு விட்டு டி.பி சத்திரம் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஜெய்னுலா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மதுரவாயல் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே சிக்னலில் காத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த டேங்கர் லாரி ஜெய்னுலாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெய்னுலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்னுலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநரான கணேசன்(62) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |