Categories
தேசிய செய்திகள்

பண்டம் வச்சிருக்கியா எனக்கு கொடு….? சிறுவனை கொன்ற இளைஞன்….!!

மதுபோதையில் சிறுவனிடம் தின்பண்டம் கேட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கலிண்டி குஞ்ச் என்னுமிடத்தில் ஷாதாப் என்ற 20 வயது இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஷாதாப்க்கு சைடிஸ் தேவைப்பட்டதால் அவ்வழியாக சென்ற 14 வயது சிறுவனிடம் சாப்பிட தின்பண்டம் வைத்துள்ளாயா என கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவன் என்னிடம் ஏதுமில்லை என கூறியதால் ஷாதாப் சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஷாதாப் கடுமையாக தாக்க சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து சிறுவன் மயங்கி விழுந்தான். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு ஷாதாப் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Categories

Tech |