புதுச்சேரி மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துளிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று கவர்னர் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச துணிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது குறித்து புதுச்சேரி அரசு சார்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், “புதுச்சேரி மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துணி வழங்குவது குறித்து கவர்னர் கிரண்பேடி கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. அதனைப்போலவே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பணம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கவர்னர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறையை மீண்டும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இது அரசு விதி”என்று அவர் கூறியுள்ளார்.