Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலங்களில் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்க… வியாபாரிகள் கோரிக்கை….!!!

பெட்டிக் கடைகளில் கிடைக்கும் பொருட்களைக் கூட பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வாங்கி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் தொழில்கள் நலிவடைந்துள்ளது. இதனால் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக பொதுமக்களுக்கும் மற்றும் கடைக்காரர்களும், துண்டுபிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், ஆன்லைன் வர்த்தகமானது சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் சிதைக்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை அறியாத வியாபாரிகள் அவர்களை ஊக்குவித்து வருகிறார்கள்.

மேலும் வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவளித்து வந்தால் சில்லரை வணிகம் அழிந்து போகக்கூடிய நிலைமை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |