புதிய கொரோனா பரவல் தடையினால் லாரி ஓட்டுனர்கள் பண்டிகை காலங்களில் தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனிற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கெண்ட் நகரில் மான்ஸ்டர் விமான நிலையத்தில் லாரிகள் ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லாரி ஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சீக்கியர்களின் தொண்டு நிறுவன உணவுகளை இலவசமாக வழங்கியுள்ளது.
அதாவது 500 கடலைக்கறிகள், காளான்கள் 300 மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சூடாக தயாரித்து மூன்று மணி நேரங்களில் அந்த லாரி ஓட்டுநர்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்கு முன்பு கென்ட் பகுதியின் கவுன்சில் அவர்களுக்கு சாக்லேட் பார்கள் வழங்கியுள்ளார்கள். மேலும் கழிவறை வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர். மேலும் இந்த லாரி ஓட்டுநர்களுக்கு ராம்ஸ்கேட் எப்சி என்ற கால்பந்து அணியின் சார்பாக பீட்சாவும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த லாரிஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு எங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துளார்கள்.