தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளை டிக்கெட் விலை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன் படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூ.2500 முதல் அதிகபட்ச மாக ரூ.3,200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
அதனைப் போல திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக ரூ.3950, மதுரைக்கு 3100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2 முதல் 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இதற்கு அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.