இந்தியாவில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் மீண்டும் கொரோனா தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய சுகாதார உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா பரவல் தன்மை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று இருந்து கொண்டு தான் உள்ளது.
மக்கள் கொரோனா குறைந்து விட்டதாக எண்ணி அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றன. தற்போது வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இத்தகைய நாட்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற மாநில அரசு வழிவகை செய்யவேண்டும். அப்படி பின்பற்றவில்லை என்றால் தொற்று எண்ணிக்கை உயர வாய்ப்பு அதிகம். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி, அரசியல், நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.