தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்களின் சில அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து வருகிறது.
இந்நிலையில் பண்டிகை கால சிறப்பு ரயில்களை நவம்பர் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் – மும்பை, சென்ட்ரல் – லக்னோ, எழும்பூர்- ஜோத்பூர், கோவை- நிஜாமுதீன், ராமேஸ்வரம் ஓஹா, நெல்லை-தாதர், மங்களூர் – லாக்மான்யா திலக், கொச்சுவேலி – மைசூர், எர்ணாகுளம் – ஓஹா, மதுரை – பிகானீர், கொச்சுவேலி – இந்தோர், நெல்லை – பிலாஸ்பூர் ரயில்கள் இரு மார்க்கத்திலும் நவம்பர் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.