Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பண்டிகை கால விடுமுறை எதிரொலி – மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பண்டிகை கால விடுமுறையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் 23, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 27-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |