Categories
பல்சுவை

பண்டிகை கால விற்பனையை அறிவித்த Flipkart, Amazon…. மக்களே ரெடியா இருங்க…..!!!!

தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்,   flipkart பிக் பில்லியன் டேஸ் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளதுஅதன்படி இந்த இரண்டு நிறுவனங்களும் மெகா ஆபர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்குகிறது.இதில் flipkart ஐ சி ஐ சி ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அமேசான் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

இந்த விற்பனையில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனைக்கு வருவது மட்டுமல்லாமல் பேங்க் ஆஃபர் மற்றும் கிரிடிட் கார்டு ஆபர் என பல்வேறு சலுகைகள் வர உள்ளன.தினமும் சுமார் 90க்கும் மேற்பட்ட பிராண்டுகளை சேர்ந்த 130 க்கும் மேலான பொருட்கள் சிறப்பு விற்பனைக்கு வர உள்ளது. எலக்ட்ரானிக்ஸ்,டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பொருட்களுக்கு இந்த விற்பனையில் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஃபேஷன் பொருள்களுக்கு 60% முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி பியூட்டி பொருட்கள் பொம்மைகள் போன்றவற்றிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |