சிவகார்த்திகேயனின் டான் படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் டான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘டான்’ படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.