Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பண்டிகை தினத்தை குறிவைத்த ‘கே.ஜி.எப்-2’… வெளியான மாஸ் தகவல்…!!!

கே.ஜி.எப்-2 திரைப்படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கே.ஜி.எப் -2 படம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே  அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

 

When will KGF Chapter 2 teaser release? Producer Karthik Gowda responds -  Movies News

நேற்று படக்குழு வெளியிட்ட போஸ்டரில் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கே.ஜிஎப் முதல் பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியானதை போலவே இந்த படத்தையும் வெளியிட படக்குழு ஆலோசித்து வருகிறதாம். அதற்குள் இயல்புநிலை திரும்பி, 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |