பீகார் மாநிலம் மதுன்பானியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் குற்றவாளியின் வயதை அடிப்படையாக வைத்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு குறித்து நீதிபதி கூறியதாவது, “வயதை அடிப்படையாக வைத்து குற்றம் செய்ய அனுமதிக்க இயலாது. ஆனாலும் இவரது வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது. மேலும் இவர் அக்கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் துணிகளையும் 6 மாதத்திற்கு துவைத்து அயர்ன் செய்து கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்