Categories
மாநில செய்திகள்

பண்ணை பசுமைக் கடையில் தக்காளி ரூ.79க்கு விற்பனை… ஆறுதல் அடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வீடுகளிலும், சமையலுக்கு தக்காளி பயன்பாடு என்பது குறைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை உட்பட்ட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பண்ணைப் பசுமை கடைகளில் விற்பனை செய்வதற்கு இரு நாளைக்கு மட்டும் 15 டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

 

Categories

Tech |