Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட…. வங்கி தலைவருக்கு… மரண தண்டனை…!!

வங்கியின் தலைவர் ஒருவருக்கு பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவைச் சேர்ந்த லாய் ஜியாமின் என்பவர் China Haurong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்தபோது பல்வேறு வகைகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் லஞ்சம், பலதார மணம் போன்று சுமார் 1,700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார். தற்போது அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லாய் மீது டியான்ஜின் என்ற நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் லாய் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றதில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது இவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை வழங்கப்படவுள்ளது. மேலும் சீனாவின் மிகப்பெரிய ஊழல்வாதியான நிதித்துறை அதிகாரி என்று அழைக்கப்படும் இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துள்ளார் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |