ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரட்டைஇலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர்த்து மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போன்று நடித்து ரூபாய்.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனிடையில் இதுகுறித்த அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 26ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இதனிடையில் ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார். இதனை ஏற்ற கோர்ட்டு ரூபாய்.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்ற மாதம் 26-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்கு குறித்த விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்திருந்த நிலையில், ஜாக்குலினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை நவம்பர் 10-ஆம் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.