பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவரின் பிரதமர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார்.
முன்னதாக ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2008-2018 வரை பதவி வகித்தார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. முந்தைய இம்ரான்கான் ஆட்சியின் போது ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் 2008-2018 இடையிலான காலக்கட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து ரூ.626 கோடி கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானின் மத்திய பரிசோதனையில் வழக்கு பதிவாகி விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவர் மீதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது நடவடிக்கையை தவிர்க்க கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கினர்.
இந்த சூழ்நிலையில் தான் அண்மையில் ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அதேமாதிரி அவரது மகன் ஹம்சா ஷபாசும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பெறுப்பேற்றார். இருப்பினும் அவர்கள் இருவர் மீதான பண மேசாடி வழக்கை பரிசோதனைை செய்து தொடர்ந்து விசாாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஷபாஸ் ஷெரீப், ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
மேலும் விசாரணையின் போது, புலனாய்வு அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கில் இந்த வழக்கில் ஷபாஸ் ஷெரீப், ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட எதிர் தரப்பு வக்கீல் புலனாய்வு அமைப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரித்து வருகின்ற போதும், ஷபாஸ் ஷெரீப், ஹம்சா ஷபாசுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவர்களை கைது செய்ய அனுமதி அளிக்கக்கூடாது என வாதிட்டார். மேலும் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.