Categories
சினிமா

“பண மோசடி வழக்கு”…. வாக்குமூலம் அளித்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ்…..!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவற்றில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்குலின் வெளிநாடு போகாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் சுகேஷ் சந்திர சேகர் உடனான தொடர்பு பற்றி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாக்குமூலம் அளித்தார். டெல்லி பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினரின் விசாரணையின் போது குற்றவியல் நடைமுறை சட்டம் 164ன் படி மாவட்ட நீதிபதி முன்பு வாக்குமூலம் அளிப்பதாக இருந்தால் விரங்களை பகிர்வதாக ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் நீதிபதி முன்னிலையில் அவர் வாக்குமூலம் அளித்தார். அதே சமயத்தில் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஜாக்குலின் மறுத்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |