சேலம் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் வரை மோசடி செய்த தொழிளாலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் நிதி நிறுவனத்தில் கணக்கை முடிக்காமல் கடந்த ஒரு வருட காலமாக பணி செய்து வந்துள்ளார். மேலும் செலவு செய்ததற்கான எந்த ஆவணமும் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனால் 2 லட்சம் வரை நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தின் பொருளாலர் காவல் நிலையத்தில் தினேஷ் குமாரின் பெயரில் புகார் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் தினேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.