டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய நாயகி பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். முதன்முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கல பதக்கதிற்கான பேட்மிட்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை பிவி சிந்து கைப்பற்றியுள்ளார்.
பிவி சிந்து ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது வெண்கல பதக்கம் வென்றுள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக்கு 30 லட்சம் பரிசு தொகையை வழங்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக இருப்பது, இன்னும் நிறைய சாதனைகள் படைப்பதற்கும், கடினமாக உழைப்பதற்கு உந்துசக்தியாக இருக்கும் என்று சிந்து தெரிவித்துள்ளார்.