Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதறவைக்கும் இரட்டைக்கொலை…. 1 கோடிக்கு கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கிற்க்காக காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கடந்த 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் சூர்யா மற்றும் அர்ஜுன் என்ற இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இவ்விரு வாலிபர்களின் குடும்பத்தார்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் உடலையும் வாங்க மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகையும், அரசு வேலையும் வழங்கக்கோரி வலியுறுத்தினர். மேலும் அரக்கோணம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ததில் 6 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |