பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று வயது மற்றும் ஒரு வயதே ஆன இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. பாலத்தின் மீது நின்று டைக்ரிஸ் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தாய் வீசும் காட்சி அந்த காணொளியில் பதிவாகி இருந்தது.
காணொளியை வைத்து அந்தத் தாயை கைது செய்த அதிகாரிகள் ஆற்றில் வீசப்பட்ட குழந்தைகளின் சடலத்தையும் மீட்டெடுத்தனர். தனது கணவரை விட்டு பெண் இரண்டு மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் குழந்தைகளை கொல்ல பல முறை திட்டமிட்டதாக குழந்தைகளின் தந்தை வழி தாத்தா தெரிவித்துள்ளார். பெற்ற தாயே குழந்தைகளை ஆற்றில் வீசும் காணொளி ஈராக் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எழ செய்துள்ளது.
https://twitter.com/i/status/1317724857161875458