பதட்டமான வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் பதற்றமான தொகுதிகளை கண்டறிய மார்ச் 26ஆம் தேதி முதல் 12 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு காரணமாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பட்டியலை வழங்க முடியாது என்று அந்த பதில் மனுவில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.