Categories
உலக செய்திகள்

பதவியேற்பு நிகழ்ச்சி…. “நாட்டின் கடனை சரி செய்வேன்” முதல் பெண் அதிபரின் சபதம்….!!

ஜியோமாரா காஸ்ட்ரோ மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின்  முதல் பெண் அதிபராக பதவி ஏற்றார்.

ஜியோமாரா காஸ்ட்ரோ ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்றுள்ளார். எந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு நாட்டின் முதல் பெண் அதிபர் என்பது பெரும் மகிழ்ச்சியும், ஒரு கடமை உணர்வையும் ஏற்படுத்தும், அதற்கேற்றாற்போல் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜியோமோரா காஸ்ட்ரோ ஹோண்டுராஸ் நாட்டின் மேல் இருக்கும் கடன் சுமையை சரி செய்வேன் என்று சபதம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ஹோண்டுராஸ் நாட்டுடனான உறவை வலுப்படுத்தும் விதமாக தைவான் நாட்டின் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |