பிரான்சில் ஒரு பெண்ணை அவரின் வீட்டு பால்கனியிலிருந்து அடித்து தூக்கிவீசிக்கொன்ற நபரை உச்சநீதிமன்றம் தண்டிக்காததால் நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
பாரிசில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் Sarah Halimi என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரை Kobili Traore என்ற 32 வயது நபர் அந்த பெண்மணியின் குடியிருப்பிலேயே வைத்து கடுமையாக அடித்ததுடன் பால்கனியிலிருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணை தூக்கி வீசும் போது Kobili, அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட்டதை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளார்கள். இதனால் அவர் இஸ்லாமியர் தான் என்பது உறுதியானது. ஆனால் இதற்கு சாட்சிகள் இருந்தபோதும், சம்பவத்தின் போது அவர் கஞ்சா போதையில் இருந்ததால் சுயநினைவின்றி இருந்தவரை விசாரணைக்கு அழைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
இதற்கு முன்பு, வரலாற்று ஆசிரியரான சாமுவேல் என்பவரை இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் கொன்றதிலிருந்து பிரான்ஸ் மக்கள் கொதிப்பில் உள்ளார்கள். இந்நிலையில் ஒரு பெண்ணை மீண்டும் இஸ்லாமியர் ஒருவர் கொலை செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிப்பது மக்களை ஆத்திரமடையச்செய்துள்ளது.
இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸ் உட்பட லண்டன், டெல்-அவிவ், மியாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழந்த Sarah Halimi யூதப் பெண்மணி ஆவார். எனவே நீதிபதி Jack Broda பிரெஞ்சு யூதர் என்பதால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.