அரசு ஊழியர்கள் பொது மக்களிடம் தன்மையாக நடந்து கொள்ளாவிட்டால் பதவி உயர்வு கிடைக்காது என்று கேரள அரசு அறிவித்துள்ளது
கேரளாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக பல சீர்திருத்த முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளன. அதிகாரிகளின் ரகசிய குறிப்பு , திறமை , பணிமூப்பு ஆகியவை வைத்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததோடு இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை கேரள அரசு அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கு மதிப்பெண் முறையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளனர்.
இதில் பணியாளரின் திறமை, அவர்கள் நடந்து கொள்ளும் முறை, அலுவலக கோப்புகளை கவனித்து விரைவில் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மதிப்பெண் 1முதல் 10வரை இருக்கும் , இதில் அதிக மதிப்பெண் எடுப்பவருக்கு பதவி உயர்வும் 5 மதிப்பெண்ணுக்கு கீழ் உள்ளவருக்கு நலத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்கிறார்களா, பணி நேரத்தில் இருக்கையில் இருந்து வெளியே சொல்கிறாரா, மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் வந்துள்ளதா என்ற குறிப்புகளை மையமாக வைத்தும் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றும் இதனை மீறினால் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று நிர்வாக சீர்திருத்தம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.