Categories
உலக செய்திகள்

பதவி வகித்த சில தினங்களில்… டிரம்பை பின்னுக்கு தள்ளிய… ஜோபைடனுக்கு கிடைத்த ஆதரவு..!!

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் 46% மக்களே ஆதரித்திருந்தனர். அதன்பிறகு 2017 ஆம் வருடத்திலேயே மார்ச் மாதத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் 52 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதாவது டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது விவாதத்திற்குரிய சில கொள்கைகளை கொண்டுவந்திருந்தார். ஆனால் அதனை அதிரடியாக ரத்து செய்ததுடன் மிக முக்கிய கொள்கைகள் சிலவற்றை ஜோபைடன் அறிவித்தார். இதனால் ஜோபைடன் பதவி வகித்த சில நாட்களிலேயே ட்ரம்பை விட 11% அதிகமான மக்கள் ஆதரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |