Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

பதவி வெறியால் ராசாவின் உளறல்…. திமுகவினர் தரம்தாழ்ந்ததுள்ளனர் – முதல்வர் கண்டனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பதவி வெறியால் ராசாவின் உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் திமுகவும் தரம்தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனது சுய வாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா? என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |