கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகள் தற்போது வரை கனிமய இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றம் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள் 2011-ன் விதி 4-ன் படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் தங்கள் தொழிற்சாலைகளை பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறினால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Categories