Categories
தேசிய செய்திகள்

பதுகம்மா திருவிழா…. நடனமாடிய ஆளுநர்… வைரலாகும் வீடியோ….!!

பதுகம்மா திருவிழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கானாவில் நவராத்திரி திருவிழாவில் வரும் மஹாளய அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா பதுகம்மாவிழா எனப்படும் மலர் திருவிழா. தெலுங்கில் பதுகம்மா என்பதன் பொருள் அம்மனே வருக என்பதாகும். தெலுங்கானாவின் கலாச்சார விழாவான இது அவர்களின் கலாச்சார உணர்வை பிரதிபலிக்கிறது.

இந்தப் பதுக்கமா திருவிழாவில் மருத்துவ குணம் கொண்ட பல்வேறு வகையான மலர்களை கோபுர வடிவில் ஏன் அடுக்குகளாக வைத்து ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து அதனை சுற்றி வண்ணமயமான பூக்களால் அலங்கரித்து பின்னர் பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவார்.இந்நிலையில் இந்த விழாவுக்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அழைக்கப்பட்டிருந்தார். தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விழாவில் மற்ற பெண்களுடன் இணைந்து தமிழிசை சௌந்தர்ராஜன் நடனமாடிய வீடியோ பிரபலமாகி வருகிறது.

Categories

Tech |