வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் பசுமாடு வளர்த்து வருகின்றார். இவர் தினசரி அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியியொட்டி மாடு மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வனப்பகுதியொட்டி பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் மர்மநபர்கள் யாரோ வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்க்காமல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்தியின் பசுமாடு பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி பசுமாட்டின் வாய்ப்பகுதி சேதமடைந்து தொங்கியது. இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.