Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பதுங்கினால் மட்டும் விட்ருவோமா…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது….!!

வாலிபரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள புதுகிழக்கு தெருவில் ராசிக்ரகுமான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ராசிக்ரகுமான் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ராசிக்ரகுமான் கீழக்கரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ராசிக்ரகுமானை தாக்கியது இஸ்மாயில் தரப்பை சேர்ந்தவர்கள் என ராகுமானின் உறவினர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு கார்த்திக்இந் உத்தரவின் படி குற்றாவளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைதொடர்ந்து ராசிக்ரகுமானை தாக்கிய நபர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்ப்பது போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் உடனடியாக விரைந்து சென்று கீழக்கரையை சேர்ந்த சதாம்உசேன்(36), கை முகம்மது கான்(27), பாரதியார் நகரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்து ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |